வில்லனாக நடிக்கும் அஜித்.. ‘ரோலக்ஸ்’ மாதிரி மாஸ் கேரக்டரா?

 
Ajithkumar

ஷங்கரின் ஆர்சி15 படத்தில் வில்லனாக நடிக்க அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து ஏகே 62 படத்தில் நடிக்க தற்போது வெறித்தனமாக தயாராகி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளாராம். தற்போது ஏகே 62 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஷங்கர் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஆர்சி15 படத்தில் நடிகர் அஜித்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு தகவல் கோலிவுட்டில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. 

Ajithkumar

ஆர்சி15 படத்தில் ராம்சரண் நாயகனாக நடிக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கியாரா அத்வானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் நிலையில், தற்போது அஜித்தை என்ன கேரக்டரில் நடிக்க அணுகியுள்ளார்கள் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது. 

அதன்படி ஆர்சி15 படத்தில் அஜித்தை மாஸ் ஆன வில்லனாக நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலெக்ஸ் கதாபாத்திரம் போல் அஜித்திற்கும் செம பவர்புல்லான ஒரு ரோலை தயார் செய்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு அஜித் ஓகே சொல்வாரா என்பது தான் சந்தேகமாக உள்ளது.

RC15

தற்போது ஹீரோவாக நடித்து வரும் அஜித், வில்லனாக நடிக்க சம்மதிப்பது கடினம் தான் என்பதே கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஷங்கரின் அழைப்பை ஏற்று ஆர்சி15-ல் நடிக்க ஓகே சொல்வாரா அஜித் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

From around the web