சர்வதேச கைக்கூலியா? நடிகர் பாலா விளக்கம்!!

 
Bala Bala

தொலைக்காட்சியில் பிரபலமான கே.பி.ஒய். பாலா பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தவர் தற்போது கதாநாயகனாகவும் காந்தி கண்ணாடி படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். 

மருத்துவமனை ஒன்று கட்டி இலவச சேவையாற்றப் போவதாக அறிவித்தார் பாலா. அதைத் தொடர்ந்து இவருக்கு எப்படி இவ்வளவு பணம் வருகிறது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வாங்கிக் கொடுக்கும் போது புகைப்படங்களில் அதன் நம்பர் ப்ளேட்டை ஏன் மறைத்துக் கொள்கிறார் என அடுக்கடுக்கான கேள்விகள் பாலா மீது வைக்கப்பட்டது. சர்வதேச கைக்கூலி என்று கூட ஒரு மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்துள்ள பாலா” என்னை சர்வதேச கைக்கூலி என்று சொல்வது எனக்கே அதிர்ச்சியாக உள்ளது. வண்டி வாங்கித் தருகிறேன் என்றால் அவர்கள் அதை தங்கள் பெயரில் மாற்றிக் கொள்வார்கள் என்பதற்காக நம்பரை மறைத்துக் கொடுக்கிறேன். ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. நிகழ்ச்சிகள், படங்களில் வரும் வருமானத்தில் தான் உதவி செய்கிறேன். பெரிய மருத்துவமனை கட்டவில்லை. வீடு கட்ட வாங்கிய இடத்தில் சிறிய க்ளினிக் தான் கட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்

From around the web