திரையரங்குளில் நாளை வெளியாகிறது இந்தியன் 2.. சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

 
Indian 2

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் சிறப்பு காட்சியை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது. இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 3 அதாவது மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

Indian 2

இந்தப் படத்தில் கமல்ஹாசன் மற்றும் பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் நடித்து இருக்கின்றனர். முன்பு வெளியான ‘இந்தியன்’ படத்தில் ஊழலுக்கு எதிரான அப்பா மற்றும் ஊழல் செய்யும் மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடித்தார் கமல்ஹாசன். இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தில் சேனாபதி கதாபாத்திரத்தில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார் என்பது இதுவரை வெளியான பட அப்டேட்களில் இருந்து தெரிகிறது.

அதாவது, சேனாதிபதி கம்பேக் எனச் சொல்லி, ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூனில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘இந்தியன் 2’ திரைப்படம் நாளை (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு லைகா புரொடக்சன்ஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Indian 2

இந்த நிலையில் நாளை ஒரு நாள் (12.07.2024) மட்டும் ‘இந்தியன் 2’ படத்தின் சிறப்பு காட்சியை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 9 மணிக்கு ‘இந்தியன் 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளும் ஒரே ஒரு சிறப்பு காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்றும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, கடைசி காட்சி அதிகாலை 2 மணிக்குள் முடிவடைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web