‘இந்தியன்-2’ படத்தின் முக்கிய அப்டேட்.. போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

 
Indian-2

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் ஜூன் மாதம் வெளியாகும் என போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன்2’ ப ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது. இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 3 அதாவது மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

Indian 2

இந்தப் படத்தில் கமல்ஹாசன் மற்றும் பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். முன்பு வெளியான ‘இந்தியன்’ படத்தில் ஊழலுக்கு எதிரான அப்பா மற்றும் ஊழல் செய்யும் மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடித்தார் கமல்ஹாசன். இந்நிலையில் ’இந்தியன் 2’ படத்தில் சேனாபதி கதாபாத்திரத்தில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார் என்பது இதுவரை வெளியான பட அப்டேட்களில் இருந்து தெரிகிறது.

அதாவது, சேனாதிபதி கம்பேக் எனச் சொல்லி, ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூனில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், என்ன தேதி என்பதைக் குறிப்பிடவில்லை.


’இந்தியன்2’ உருவாகும் கையோடு அதன் மூன்றாவது பாகமும் உருவாகிறது என்பது ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் செய்தியாக அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிட்டிருந்த ‘இந்தியன்2’ படம், அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ பட ரிலீஸால் முன் கூட்டியே வெளியாகிறது என்ற பேச்சும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web