திரைப்பட வினியோகிஸ்தராக களம் இறங்கும் இன்பன் உதயநிதி!!

 
idli Kadai idli Kadai

கலைஞரின் குடும்பத்தினர் திரைத்துறையில் வெவ்வேறு வகையில் தொடர்ந்து பங்களித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு  என கலைஞர் தொடர்ந்து இயங்கி வந்தார். கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து நடிகராக வெற்றி பெற்றார். கலைஞர் இளைய மகன் மு.க.செல்வம் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திரைப்படம், தொலைக்காட்சிகளில் நடிகராக வலம் வந்தவர். குறிஞ்சி மலர் தொலைக்காட்சி தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.

கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் வினியோகிஸ்தராக, தயாரிப்பாளராக வெற்றி பெற்று நடிகராகவும் தனி முத்திரை பதித்து வெற்றிப் படங்களை தந்தவர். இன்னொரு பேரன் தயாநிதி அழகிரியும் வினியோகிஸ்தர் ,தயாரிப்பாளராக வெற்றி பெற்றவர்.

கலைஞரின் கொள்ளுப் பேரனும் 4வது  தலைமுறையைச் சார்ந்தவருமான இன்பன் உதயநிதி ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ரெட்ஜெயண்ட் வினியோகிக்கும் படங்கள் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என்ற தலைப்புடன் விளம்பரம் செய்யப்படும். தனுஷ் நடிப்பில் வெளியாகும் இட்லிகடை படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்ய உள்ளது. இந்தப் பட விளம்பரத்தில் இன்பன் உதயநிதி வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள தனுஷ் இன்பன் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

From around the web