ரொம்ப கஷ்ட படுறேன்.. உதவி பண்ணுங்க.. உதவி கேட்கும் பிரபல காமெடி நடிகர்
நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த வெங்கல் ராவ் உடல்நிலை சரியில்லாமல் வீடியோ வெளியீட்டு உதவி கேட்டு உள்ளார்.
நடிகர் வடிவேலுடன் இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமான நடிகர், வெங்கல் ராவ். மொட்டை ராவ் எனச் சொன்னால் திரையுலகினர் அனைவருக்கும் இவர் முகம் ஞாபகத்துக்கு வரும். ஆந்திராவை சேர்ந்த இவர், முதலில் ஸ்டன்ட் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சினிமா வாழ்க்கையில் சுமார் 25 வருடத்தை ஸ்டன்ட் மாஸ்டராக இருந்து கடத்தியவர்.
‘நீ மட்டும்’ படம் முதல் நகைச்சுவை நடிகரானார். அதனைத் தொடர்ந்து வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். இவரது காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். தனது நடிப்பால் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற வந்த இவர், வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டதால், இவருக்கும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமா படங்களில் வெங்கல் ராவை பார்க்க முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு வெங்கல் ராவ் சிறுநீரகக் கோளாறு காரணமாக தனது சொந்த ஊரான விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து இருந்தார். அத்துடன் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.
இந்நிலையில் வெங்கல் ராவ் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தனக்கு பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ வெளியீட்டு இருக்கிறர்.
#வடிவேலு உடன் காமெடி வேடங்களில் நடித்த #வெங்கல்ராவ் ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து, சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) June 24, 2024
மருத்துவச் செலவுக்கு நடிகர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் தனக்கு உதவும்படி வீடியோ வெளியிட்டுள்ளார்.@GovindarajPro #VengalRao pic.twitter.com/6wkYJBVTqK
அதில், “எல்லாருக்கும் வணக்கம். நான் வெங்கல் ராவ். எனக்கு கை, கால் விழுந்திடுச்சு. என்னால நடக்க முடியல, பேசவும் முடியவில்லை. சிகிச்சை எடுக்க மருத்துவமனைக்கு செல்ல கூட பணம் இல்லை. மருந்து கூட வாங்க முடியவில்லை. சினிமா நடிகர்கள், சங்கங்கள் எனக்கு உதவி செய்யுங்க. உங்களால முடிந்த உதவி செய்தால் கூட போதும். இதற்கு மேல என்னால பேச முடியவில்லை” என உருக்கமாக பேசி உள்ளார். நடிகர்கள், நடிகைகள் அவருக்கு உதவ வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.