‘என்னை மன்னிச்சிடுங்க டாடி’ முனீஸ்ராஜாவைப் பிரிந்து கதறி துடித்த ராஜ்கிரண் மகள்!

 
Rajkiran

நாங்கள்  பிரிந்து விட்டோம், பிரிந்து சில மாதங்கள் ஆகிறது என்று நடிகர் ராஜ்கிரன் மகள் வீடியோ வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' சீரியலில் சம்பந்தம் என்கிற கேரக்டரில் அறிமுகமானவர் முனீஸ்ராஜா. இவர் நடிகர் சண்முகராஜனின் உடன் பிறந்த தம்பி ஆவார். திருமுருகன் இயக்கிய 'நாதஸ்வரம்' சீரியலில் இவரின் பேச்சு, நடைக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதன் பிறகு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' என்கிற சீரியலில் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில் முனீஸ்ராஜாவும் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் மூலம் இவர்களின் சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.

காதலுக்கு வீட்டில் ஒப்புதல் இல்லை என்பதால் அவர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில்  நடிகர் ராஜ்கிரண் ‘பிரியா என் மகளே இல்லை’ என அறிவித்திருந்தார். பிரியா அவரது வளர்ப்பு மகள் என்பது அப்போதுதான் வெளியுலகத்துக்கே தெரிய வந்தது. திருமணம் முடிந்தப் பிறகு  இரு தரப்பும் காவல்துறையில் மாறி மாறிப் புகார் அளித்து பெரும் சர்ச்சைகளும் எழுந்தன.

Rajkiran

ராஜ்கிரணும், அவரின் மனைவியும் விருப்பம் தெரிவிக்காமல் இருந்த நிலையில் பிரியா முனீஸ்ராஜாவுடன் சென்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ‘எங்கள்  திருமணம் சட்டபூர்வமானது இல்லை. நாங்கள்  பிரிந்து விட்டோம், பிரிந்து சில மாதங்கள் ஆகிறது’ என்று தெரிவித்து பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், “நான் 2022-ம் ஆண்டு நடிகர் முனீஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்டேன். அவை  மீடியா மூலமாக உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த திருமணத்திற்கு பிறகு நாங்கள் பிரிந்துவிட்டோம். பிரிந்து சில மாதங்கள் ஆகின்றன. எங்கள் திருமணம் சட்ட பூர்வமான திருமணம் கிடையாது. இந்த கல்யாணத்திற்கு பிறகு என்னை வளர்த்த அப்பாவை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன்.


அவரை நான் கஷ்டப்படுத்தி இருந்தாலும் எனக்கு ஒரு பிரச்சனை  வந்தபோது அவர் என்னை கைவிடாமல் காப்பாற்றினார். இது நான் எதிர்பார்க்காதக் கருணை. எத்தனை முறை நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டாலும் போதாது. என்னை மன்னிச்சிடுங்க டாடி என்று” மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web