சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்கள்.. நான் ஆபாச பட நடிகை இல்லை.. நடிகை கிரண் வேதனை

 
KIran

கவர்ச்சி போட்டோக்களை போடுவதால் நான் ஒன்னும் ஆபாச பட நடிகை இல்லை என நடிகை கிரண் வேதனை தெரிவித்துள்ளார்.

2002-ல் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஜெமினி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிரண். அதனைத் தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் , வின்னர், தென்னவன், நியூ, சகுனி, ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை கிரணுக்கு வயதானதாலும், உடல் எடை கூடியதாலும் படிப்படியாக பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. இதையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால், செயலி ஒன்றை தொடங்கி, அதில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட சம்பாதிக்க ஆரம்பித்தார் கிரண்.

Kiran

பிறகு அவருக்கு தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டார். இதனையடுத்து, பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு மிகவும் வேதனையுடன் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய கிரண், நான் ஒருவரை காதலித்தேன். நான் அவருடன் 4 வருடங்கள் உறவில் இருந்தேன். ஆனால் அவர் சரியில்லை என்று கொஞ்ச நாட்கள் பிறகுதான் தெரிந்து கொண்டேன். நான் அவரை திருமணம் செய்திருந்தால், அவர் என்னைக் கொலை கூட செய்திருப்பார். அந்த அளவிற்கு அவர் மிகவும் கெட்டவர். எனவே நான் அவரிடம் இருந்து விலகிவிட்டேன். அதன்பிறகும் ஒருவரை காதலித்தேன். அவனும் நல்லவன் இல்லை.

Kiran

அவனுக்கும் எனக்கும் செட் ஆகவில்லை எனவே, இருவரும் பிரிந்துவிட்டோம். தற்போது நான் தனியாக இருக்கிறேன். நான் எடுத்த தவறான முடிவால் என் வாழ்க்கையே அழிந்தது. பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு இப்படியான சிலரை நம்பி ஏமாந்ததுதான் காரணம். இப்போது நான் நடிக்க விரும்புகிறேன். ஆனால் யாரும் எனக்கு பட வாய்ப்புகள் தருவதில்லை. யாராவது வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக மீண்டும் நடிப்பேன் என்றார்.

மேலும் என்னுடைய சமூக வலைதளங்களில் நான் கிளாமரான போட்டோக்களை, வீடியோக்களை பதிவு செய்கிறேன். எனக்கு பிடித்த ஆடைகளை உடுத்தி நான் வீடியோக்களை பதிவிடுகிறேன். கவர்ச்சி போட்டோக்களை போடுவதால் நான் ஒன்னும் ஆபாச பட நடிகை இல்லை.  இணையத்தில் வரும் கமெண்டுகள் என்னை காயப்படுத்துகிறது என்று நடிகை கிரண் வேதனை தெரிவித்துள்ளார்.

From around the web