சட்டவிரோத பணபரிவர்த்தனை... லைகா நிறுவனத்தில் அதிரடி சோதனை!! சென்னையில் பரபரப்பு

 
Lyca

சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரின் பேரில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

2008-ல் வெளியான ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தை ஞானம் பிலிம்சுடன் இணைந்து சுபாஸ்கரன் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன்பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தார். அதனைத் தொடர்ந்து, ‘கோலமாவு கோகிலா’, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளது.

Lyca

இந்த நிலையில், இந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய அடையாறு, தி.நகர், காரப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். 

சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமானது 300 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Raid

தொழிலதிபர் சுபாஷ்கரனுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழ்குமரன் செயல்பட்டு வருகிறார். கமலின் ‘இந்தியன் 2’ ரஜினி நடிக்கும் ‘லால் சலாம்’, அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web