கார் டிக்கியை திறக்க மாட்டேன்... போலீசாரிடம் மல்லு கட்டிய நிவேதா பெத்துராஜ்..? தீயாய் பரவும் வீடியோ!

 
Nivetha Pethuraj

நடிகை நிவேதா பெத்துராஜ் காரை நிறுத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், கார் டிக்கியை திறக்க முடியாது என வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் பரவி வருகின்றன.

2016-ல் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் போன்ற படங்களில் நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

Nivetha Pethuraj

இந்தநிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் காரை நிறுத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் தன்னுடைய கார் டிக்கியை திறக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடிகை நிவேதா பெத்துராஜின் காரை மடக்கிய போலீசார் சோதனை செய்துள்ளனர். நிவேதா பெத்துராஜிடம் காரின் டிக்கியை திறக்க சொல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், நடிகை நிவேதா பெத்துராஜ் காரின் டிக்கியை திறக்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.


போலீசாருடன் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  மேலும், இந்த வீடியோ விரைவில் வெளிவரும் அவரது தெலுங்கு படத்திற்கான புரோமோஷனுக்காகவா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

From around the web