நானே படம் செய்யமாட்டேன்.. மனைவி சுளீர்.. விஜய்யின் தம்பிக்கு நேர்ந்த சோக நிலை

 
vikranth

சமீபத்தில் பேட்டிகளில் கலந்துகொள்ளும் நடிகர் விக்ராந்த் அவரது மனைவி பேசிய ஒரு விஷயம் குறித்து பேசியிருக்கிறார்.

2005-ம் ஆண்டு இயக்குநர் ஆர்.பி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான ‘கற்க கசடற’ படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விக்ராந்த். கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் இவருக்கு கிரிக்கெட்டில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கப்பெறாததால் சினிமாவில் நுழைந்தார்.

விஜய்யின் தம்பி விக்ராந்த் என்று தான் பலராலும் பார்க்கப்பட்டது. அதே போல் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை இவருக்கு பெற்று தரவில்லை. அவரது கேரியரில் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் பாண்டிய நாடு.

Lal salam

அதன் பின்னர் கவண், தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் இணைந்திருக்கிறார். இந்தப்படம் வருகிற 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து ரெட்நூல் சேனலுக்கு அவர் அண்மையில் பேசினார்.

அப்போது பேசிய விக்ராந்த், கிரிக்கெட்டிலிருந்து விலகி சினிமாவில் நுழைந்த பிறகு, பெரிதாக கவனமோ மெனக்கிடலோ போடாமல் இருந்தேன். தானாக வாய்ப்பு கிடைக்கும் என இருந்தேன். ஒரு காலகட்டத்தில் கிட்டத்தட்ட 105 கிலோ உடல் எடையை நெருங்கினேன். வீட்டில் இருப்பவர்கள் வெடுக்கென பேசுவார்கள்.

vikranth

அப்போது என் மனைவி என்னை கண்ணாடி முன் நிக்கவைத்து, இப்படியான உருவத்தையும் இப்படியான கவனமற்ற ஒருவரையும் வைத்து பணம் இருந்திருந்தால் நானே படம் செய்யமாட்டேன்.. அப்புறம் எதற்கு வெளியில் உன்னை வைத்து படம் எடுப்பார்கள் என நினைக்கிறாய் என பேசினாராம் விக்ராந்தின் மனைவி.

அவர் பேசியது விக்ராந்த் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதால். அதன்பிறகு கண்டிப்பாக உழைத்தாக வேண்டும் என முயற்சியை போடா ஆரம்பித்தாராம் விக்ராந்த். இவ்வாறாக, நடிகர் விக்ராந்த் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். தனது மனைவி கடுமையாக நடந்து கொண்டிருந்தாலும், அவரது பேச்சுதான் தன்னை இந்த நிலைமைக்கு கொண்டுசெல்ல காரணம் எனவும் பேசியிருக்கிறார் விக்ராந்த்.

From around the web