கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்.. பாடலாசிரியர் விவேகா போட்ட பதிவு

 
Viveka

சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தை பார்த்த விவேகா படம் பார்த்து மெய்சிலிர்த்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. மாபெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் கங்குவா படத்தை ஸ்டுடியோ க்ரீன் K.E. ஞானவேல் ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி புரோமோத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தொகுப்பை நிஷாத் யூசுப் கவனித்து வருகிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

Kanguva

இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இப்படத்தை சர்வதேச அளவில் 10 மொழிகளில் வெளியிட இருப்பதாகவும், ஓடிடியில் 20 மொழிகளில் வெளியிட உள்ளதாகவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தில், அனிமல் படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாபி தியோல், ‘உதிரன்’ எனும் கேரக்டரில் நடித்துள்ளார். இதன் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ, டீசர் உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கங்குவா படம் பார்த்த பாடல் ஆசிரியர் விவேகன் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன். இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம், இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம். இந்த சிறந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் பெருமையாக உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

From around the web