நான் 100 சதவீதம் உண்மையாவே இருந்தேன்... விவாகரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த நடிகை சமந்தா..!

 
Samantha

விவாகரத்து சர்ச்சை குறித்து முதன் முறையாக மனம் திறந்து நடிகை சமந்தா அளித்திருக்கும் பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா அரிய வகை தசை அழற்சி நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இதனால் தன்னால் படுக்கையில் இருந்து கூட ஒரு சில நாட்கள் எழ முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு கடுயைமான வலியை அனுபவித்து வருவதாகவும் உருக்கமாக கூறியிருந்தார். இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் நடிகை சமந்தாவுக்கு ஆறுதல் கூறி வந்தனர். 

samantha

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மெல்ல மீண்டுவருகிறார். நோயிலிருந்து குணமாக பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினார். நீண்ட ஓய்விலிருந்த அவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துவருகிறார்.

சமந்தா நடிப்பில் சாகுந்தலம் என்ற படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டுவருகிறார். சாகுந்தலம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில், விவாகரத்து குறித்து பேசியிருக்கிறார்.


அதில், நான் விவாகரத்து செய்த சில நாட்களிலேயே எனக்கு புஷ்பா படத்தின் ஊ சொல்றியா பாடலில் நடனமாட வாய்ப்பு வந்தது. உடனடியாக சம்மதித்தேன். நண்பர்கள், குடும்பத்தினர் என்னிடம், நீ இந்த நேரத்தில் குத்து பாடலுக்கு ஆடுவது நன்றாக இருக்காது என்றார்கள். நான் என் திருமண பந்தத்தில் நூறு சதவிகிதம் உண்மையாக இருந்தேன். ஆனால் எனக்கு சரியாக அமையவில்லை. நான் செய்யாத குற்றத்திற்கு நான் ஏன் வருத்தப்பட வேண்டும். ஏற்கனவே நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன் என்று பேசினார்.

From around the web