நான் அவரை காதலிக்கிறேன்.. ஓபனாக உண்மையைச் சொன்ன தமன்னா!

 
Tamannah

முதன்முறையாக நடிகரை காதலிப்பதை நடிகை தமன்னா யூடியூப் பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. 2006-ல் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தமன்னா அறிமுகமானார். தனது முதல் படத்தில் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஓரளவுக்கு ஈர்த்த தமன்னா, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெளியானாலும் ரசிகர்களின் கவனத்தை பெருமளவு ஈர்க்க தவறிவிட்டது. அதன் பின்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘படிக்காதவன்’ படத்தில் தனுசுக்கு ஜோடியாக தமன்னா களம் இறங்க இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானது. 

Tamannah

குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த தமன்னா கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ரசிகர்கள் கூட்டம் மளமளவென பெறுகத் தொடங்கியது. அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் அங்கும் இங்கும் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கிய தமன்னா, தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவராகிவிட்டார்.

அஜித், விஜய், கார்த்தி என்று டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிக்க தொடங்கிய தமன்னா, தற்போது இந்தி சினிமாவில் செம பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தமன்னா நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் 2 பட டீசர் வெளியாகியிருந்தது.

Tamannah

இதனிடையே, தமன்னாவும் விஜய் வர்மா என்ற பாலிவுட் நடிகரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தமன்னா முதன்முறையாக தனது காதலை ஒப்புக்கொண்டிருக்கிறார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்ற படத்தில் நடிக்கும் போது தான் தனக்கும் விஜய் வர்மாவுக்கும் காதல் மலர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

From around the web