விவாகரத்துக்கு விருப்பம் இல்லை .. நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை!

 
Aarthi - Jayam Ravi

நடிகர் ஜெயம் ரவியுடன் தனிப்பட்ட முறையில் பேச தான் தயாராக இருப்பதாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. பிரபல தயாரிப்பாளும், திரைக்கதை எழுத்தாளருமான மோகனின் மகன் ஜெயம் ரவி. அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகினார். சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தீபாவளி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் பிரதர் திரைப்படம் அடுத்து வெளியாகவுள்ளது.

மனைவியை விவாகரத்து செய்வதாக கடந்த சில வாரங்களுக்கு முன் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், தனக்கு தெரியாமலேயே ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறி ஆர்த்தி குண்டை தூக்கிப் போட்டார். பின்னர் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கும் இருக்கும் தொடர்பே அவருக்கும் ஆர்த்திக்கும் இடையே விரிசல் ஏற்படுவதற்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.

Jayam Ravi

இந்நிலையில் விவாகரத்து விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில், “எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் பகிரப்படும் கருத்துக்களை பார்த்து நான் அமைதியாக இருப்பது எனது பலவீனம் மற்றும் குற்ற உணர்வினால் அல்ல. உண்மையை மறைக்க என்னைப் பற்றி மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிக்காமல் நான் கண்ணியமாக இருக்கிறேன். ஆனால் நீதி நிலை நிறுத்தப்படும் என நம்புகிறேன். 

தெளிவாக சொல்வது என்றால் நான் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது அவர் எடுத்த தனிப்பட்ட முடிவு தான். அவரின் முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது. 

இப்பவும் நான் அவருடன் தனிப்பட்ட முறையில் பேச தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போது வரை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது. திருமண பந்தத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இது பற்றி பொதுவெளியில் பேசி யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்தின் நலமே எனக்கு முக்கியம். கடவுளின் அருள் கிடைக்கும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web