வீட்டை பார்க்க வந்த தொழிலதிபர்.. இப்படி பண்ணுவாருனு நினைக்கல... பிரபல நடிகை பரபரப்பு புகார்

 
Sherlyn chopra

மும்பை தொழிலதிபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 

2002-ல் ஜீவன் நடிப்பில் வெளியான ‘யூனிவர்சிட்டி’ என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷெர்லின் சோப்ரா. இவர் தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் பிரபலமாக திகழும் இவரை ராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்தும் வருகின்றனர். இணையத்தில் இவர் பகிரும் கவர்ச்சி புகைப்படங்களை காணவே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போலீஸில் புகார் அளித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் பரஸ்மானி லோதா தன்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார் என ஷெர்லின் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Sherlyn chopra

இதுகுறித்து ஷெர்லின் கூறியிருப்பதாவது, மும்பை தொழிலதிபர் ஒருவர் துபாயிலிருந்து எனக்காக வந்திருப்பதாக கூறினார். மேலும் என்னை ஹோட்டலில் சந்திக்க விரும்புவதாக கூறினார். மதியம் சந்திக்க அழைத்தார், ஆனால் எனக்கு ஷூட்டிங் இருந்ததால் எனது மேலாளருடன் அவர் கூறிய ஹோட்டலுக்கு மாலை பொழுதில் வந்தேன்.

அங்கு இருந்த நபர் தான் சுனில் பரஸ்மானி லோதா என அறிமுகம் செய்து கொண்டார். அவர் என்னிடம் ஒரு வீடியோ ஆல்பம் பாடல் செய்ய வேண்டும் என்றார். அதற்கு நான் சம்மதித்தேன். தொழிலதிபர் என்னை வெகுவாக பாராட்டி பேசியிருந்தார். மேலும் நான் கவர்ச்சியாக இருப்பதாகவும் சொன்னார். எனது மேனேஜரிடம் பாடல் தயாரிப்புக்காக அட்வான்ஸ் தொகையை கொடுத்தார்.

பின்னர் சிறிது நேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் வீட்டிற்கு கிளம்ப முற்பட்ட போது, அவர் தன்னிடம் வாகனம் இல்லாததால் தான் சொல்லும் இடத்தில் இறக்கிவிட முடியுமா என கேட்டார். நானும் ஓகே சொல்லிவிட்டு, என்னை முதலில் என் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு அவரை அவரது வீட்டில் இறக்கிவிடுமாறு என் டிரைவரிடம் சொன்னேன்.

sherlyn chopra

என் வீடு வந்தவுடன் அந்த நபர் என் வாட்டை பார்க்க முடியுமா என கேட்டார். நானும் வாங்க என அழைத்துச் சென்றேன். பிறகு அவர் என் வீட்டிலிருந்தே சாப்பாட்டை ஆர்டர் செய்து சாப்பிட்டார். பின்னர் சோபாவில் அமர்ந்து மது அருந்தினார். எனது மார்பில் கை வைத்தார். நான் அதிர்ந்தேன். உடனே நான் கவர்ச்சியாக இருப்பதாக என்னை வர்ணித்தார். நான் எனக்கு இதெல்லாம் பிடிக்காது நீங்கள் உடனே கிளம்புங்கள் என்றேன். உடனே அவர் மன்னிப்பு கேட்டார். 

பின்னர் தனது போனுக்கு சார்ஜ் போட வேண்டும் என கூறி என் அறைக்கு வந்து மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது நான் கவர்ச்சியாக இருப்பதால் தன்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறினார். உடனே நான் எதிர்த்ததால் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என ஷெர்லின் கூறியிருந்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் சுனில் லோதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web