நாளை இருப்போமானு தெரியாது.. விபத்தை சந்தித்த ராஷ்மிகா மந்தனா உருக்கமான பதிவு

 
Rashmika Mandhana

நாளை என்பது நிரந்தரமல்ல என தத்துவ மழை பொழிந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, தான் விபத்தில் சிக்கி குணமடைந்தது குறித்து பகிர்ந்துள்ளார்.

2016-ல் கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் மிகுந்த பிரபலமடைந்தார். 

Rashmika

2021-ல் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘புஷ்பா’ படத்திலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘சீதாராமம்’ படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர், விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ படத்தில் நடித்தார். தற்போது, புஷ்பா 2, சாவா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் தனது செயல்பாடு இல்லாததற்கான காரணத்தை  வெளிப்படுத்தி இருக்கிறார். 

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த மாதம் நான் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தேன். ஏனென்றால் எனக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது.  பின்னர் அதிலிருந்து குணமடைய மருத்துவர்களின் அறிவுரையின்படி வீட்டில் ஓய்வெடுத்தேன். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். உங்களை கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை கொடுங்கள். நாளை நமக்கு உண்டா என்று தெரியாது, எனவே ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web