இந்தி தெரியாது போயா.. வெளியானது ரகு தாத்தா பட டீசர்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரகு தாத்தா’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தசரா’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத் தொடர்ந்து இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ‘ரகு தாத்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் டீசரை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “கயல்விழியின் அட்டகாசமான நகைச்சுவை பயணத்தை காண தயாராகுங்கள். ரகு தாத்தா விரைவில் உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில்...” என டீசரை வெளியிட்டுள்ளார்.
இந்த டீசரின் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடியில் கலங்கடிக்கிறது. முழுக்க முழுக்க இந்தி மொழி திணிப்புக்கு எதிராக உருவாகியுள்ள இந்த டீசரில், காமெடிக்கும் பஞ்சமில்லை. “இந்தி எக்ஸாம் எழுதினா தான் ப்ரொமோஷன் கிடைக்கும்னா எனக்கு ப்ரொமோஷனே வேண்டாம்” என கீர்த்தி சுரேஷ் பேசிய வசனம் வைரலாகி வருகிறது.
Get ready to experience the ultimate comedy extravaganza that celebrates the misadventures of Kayalvizhi in #Raghuthatha, a comedy like no other.
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 12, 2024
Coming soon to a cinema near you!
கயல்விழியின் அட்டகாசமான நகைச்சுவை பயணத்தை காண தயாராகுங்கள்.
#ரகுதாத்தா, விரைவில் உங்கள் அருகில்… pic.twitter.com/JbxqS1uvx8
அதேபோல், திணிக்காதே திணிக்காதே இந்தியை திணிக்காதே... இந்தி தெரியாது போயா என்ற வசனங்களும் ட்ரெண்டாகி வருகின்றன. ரகு தாத்தா படம் முழுக்க இந்தி மொழி திணிப்புக்கு எதிரான சம்பவங்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம் இந்து மதத்தினரை புண்படுத்தியதாக ஓடிடியில் இருந்து டெலிட் செய்யப்பட்டது. அதேபோல், இந்தி மொழிக்கு எதிராக உருவாகியுள்ள ரகு தாத்தா படத்துக்கும் குறிப்பிட்ட அமைப்பினரால் பிரச்சினை வருமே என எதிர்பார்க்கப்படுகிறது.