என்னால தமிழ் பேச முடியல.. பிரபல நடிகை வருத்தம்!! வைரல் வீடியோ

 
Shriya

எனக்கு தமிழ் பேச வரல என நடிகை ஸ்ரேயா கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

2001-ல் வெளியான ‘இஷ்டம்’ படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானவர் ஸ்ரேயா. அதன்பின், 2003-ல் வெளியான ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2005-ல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘மழை’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர், தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

shriya

இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரூ கோச்சே என்பவரை ஸ்ரேயா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு கணவருடன் பார்சிலோனாவில் குடியேறினார். அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து சென்றார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா, அவ்வப்போது குடும்பத்தினருடன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது. தற்போது சில படங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள ஸ்ரேயா, எனக்கு தமிழ் பேச வரல என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web