நடக்கக்கூட முடியல.. முதுக்குதண்டில் ஆப்ரேசன்.. பரிதாப நிலையில் விஜே கல்யாணி!

நடிகை கல்யாணி எழுந்து நடக்கக்கூட முடியாமல் பரிதாபமான நிலையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2001-ல் வெளியான ‘அள்ளி தந்த வானம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் VJ கல்யாணி. அதனைத் தொடர்ந்து ரமணா, ஜெயம், மறந்தேன் மெய்மறந்தேன், இன்பா, கத்தி கப்பல், இளம்புயல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டில் நடிகை கல்யாணி இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரான ரோஹித்தை மணந்தார். இந்த தம்பதியருக்கு 2018-ம் ஆண்டு நவ்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையிலிருந்து விலகி இருந்த கல்யாணி, அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் நடிகை கல்யாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடக்கக்கூட முடியாமல் செவிலியர்களின் துணையுடன் நடந்து வரும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சோர்வாக இருக்கிறேன். எனது உடல்நிலை சற்று மோசமாக உள்ளது. 2016ம் ஆண்டு எனக்கு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடந்தது. சிறிது காலம் நலமாக இருந்தேன், அதன் பிறகு தான் எனக்கு நவ்யா பிறந்தாள்.
டந்த 6 மாதங்களுக்கு முன்பு என் முதுகுத் தண்டுவட நிபுணரிடம் ஆலோசனை செய்தேன். அப்போது அவர், இதற்கு முன் நடந்த அறுவை சிகிச்சையில் குணமாகவில்லை, இதனால், இந்த முறை ஸ்க்ரூவை அகற்றிவிட்டு இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்.
மேலும், முந்தைய அறுவை சிகிச்சையின் போது, முதுகுத்தண்டில் வைக்கப்பட்ட ஸ்க்ரூகளை அகற்ற வேண்டும், மேலும், வேறொருவரின் எலும்பு பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். இந்த முறை நான் குணமடைய பல நாட்கள் ஆகும். என் கணவர் ரோகித் என் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நின்றார். 5 வயது என் மகள் நவ்யா என் மீது காட்டிய பாசத்தை என்னால் நம்பவே முடியவில்லை.
எனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும், என்னை கவனித்துக்கொள்ளும் மருத்துவர்களுக்கும் மிகவும் நன்றி. நான் என் உடலை இனி முன்பைவிட நன்றாக கவனித்துக்கொள்வேன் விஜே கல்யாணி உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் விரைவில் குணமடைய அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.