நானுமே படத்தில் வரும் ஒரு கேரக்டர் போலத்தான்.. ‘லப்பர் பந்து’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய வெற்றிமாறன்!

 
Lubber Pandhu team

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் லப்பர் பந்து படக்குழுவினரைச் சந்தித்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இந்தப் படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Lubber Pandhu

இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி படக்குழுவை பாராட்டியிருந்தார். பின்பு சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ் ஆகியோர் பாராட்டியிருந்தனர். இரண்டு ஆண்களுக்கு இடையிலான ஈகோ மோதலுடன் கிரிக்கெட் களத்தில் பயணிக்கும் திரைப்படம் பெண்ணியம், சாதிய பாகுபாடுகள் எனச் சமூக கருத்துக்களையும் பேசி மக்களை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் லப்பர் பந்து படக்குழுவினரைச் சந்தித்துப் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “ரொம்ப நாள் கழிச்சு நான் பார்த்த நல்ல பொழுதுபோக்கு படம். ரைட்டர், டைரக்டர், கேமராமேன், நடிகர்கள் என எல்லாருமே அவுங்கவுங்க வேலையை அவ்ளோ அழகா பண்ணியிருக்காங்க. படத்தை பார்க்கும் போது, நான் எங்க ஊர்ல கிரிக்கெட் டீம் நடத்துன விஷயங்கள், அதில் சந்தித்த மனிதர்கள் எல்லாம் நியாபகத்துக்கு வந்தாங்க.


நானுமே படத்தில் வரும் ஒரு கேரக்டர் போலத்தான். ஒரு கிராமத்தில் வளர்ந்தவர்களையும் கிரிக்கெட்டை விரும்பி பார்க்குறவங்களையும் என எல்லாருக்குமே இந்த படம் புடிக்கும். அதையும் தாண்டி ஒரு குடும்பத்தில் இருக்கும் முக்கியமான விஷயங்களையும் இந்தப் படம் பேசுகிறது. உண்மையிலே நான் ரொம்ப என்ஜாய் பன்னி பார்த்தேன்” என்றார்.

From around the web