ஹனிமூன் போலாமா.. லைவ் ஷோவில் காமெடி நடிகரை அறைந்த பாகிஸ்தான் பாடகி.. வைரல் வீடியோ!
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகி ஷாஜியா மன்சூர், டிவி லைவ் ஷோவில் அவருடன் உரையாடிய காமெடி நடிகர் ஷெர்ரி நன்ஹாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அவரை தாக்குவது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஷாஜியா மன்சூர். இவர் டிவி லைவ் ஷோவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது, அவருடன் உரையாடிய காமெடி நடிகர் ஷெர்ரி நன்ஹாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அவரை தாக்குவது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஹனிமூன் குறித்து காமெடி நடிகர் ஷெர்ரி நன்ஹா நகைச்சுவையாக பேசுவதும், பின்னர் அவர் தாக்கப்படுவதும் பதிவாகி உள்ளது. “ஒருவேளை நமக்கு திருமணம் ஆனால், நமது ஹனிமூனுக்கு உங்களை உடனடியாக மான்டே கார்லோவுக்கு அழைத்துச் செல்வேன். நீங்கள் எந்த வகுப்பில் பயணிக்க விரும்புவீர்கள்? என்று சொல்ல முடியுமா?” என்று நகைச்சுவையாக கேட்கிறார் ஷெர்ரி நன்ஹா.
இந்த கேள்வியை எதிர்பார்க்காத ஷாஜியா மன்சூர் ஆத்திரமடைந்து, ஷெர்ரி நன்ஹாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை சரமாரியாக தாக்கினார். அத்துடன் அவரை மூன்றாம் வகுப்பில் பயணிக்கும் நபர் என அவரை விமர்சனம் செய்தார்.
“கடந்த முறையும் இப்படித்தான் நடந்தது. அப்போது எனது கோபத்தை பிராங்க் என கூறி மூடி மறைத்தேன். ஆனால் இந்த முறை அப்படி இருக்கமுடியாது. நீங்கள் பெண்களிடம் இப்படித்தான் பேசுவீர்களா? ஹனிமூன் என்கிறீர்கள்” என்றும் கடுமையாக திட்டினார்.
Slap kalesh b/w Pakistani Singer Shazia Manjoor and Co-Host of show over making joke on 'Honeymoon' with a Woman
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 27, 2024
pic.twitter.com/6fehVrq7NS
பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் குறுக்கிட்டு, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஸ்கிரிப்டை பின்பற்ற வேண்டும் என்றும், அதைத் தாண்டி எதுவும் பேசவேண்டாம் என்றும் காமெடி நடிகர் நன்ஹாவிடம் கூறினார். எனினும் ஆத்திரம் தணியாத பாடகி ஷாஜியா மன்சூர், ஸ்டுடியோவை விட்டு வெளியேறினார். இனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் கூறிவிட்டு சென்றார்.