பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு அறுவை சிகிச்சை.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Arnold

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு முழங்கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

‘டெர்மினேட்டர்’ படங்களில் நடித்து உலக புகழ்பெற்றவர் நடிகர் அர்னால்டு. உலகம் முழுவதும் இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடைசியாக 2019-ம் ஆண்டு ‘டெர்மினேட்டர் - டார்க் பேட்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்தபோதே அவருக்கு கை மற்றும் தோள் பட்டையில் காயங்கள் ஏற்பட்டன.

Arnold

படப்பிடிப்பு முடிந்த பிறகு அறுவை சிகிச்சை செய்துகொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. இதற்கிடையில் தற்போது ‘குங் பியூரி-2’ படத்தில் நடித்துள்ளார். இது அதிரடி ஆக்ஷன் படம் என்பதால், சாகச சண்டை காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் அர்னால்டு முழங்கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். கையில் கட்டு போட்டுள்ள அவரது புகைப்படங்கள் வெளியான பிறகே அறுவை சிகிச்சை செய்து கொண்ட விவரம் தெரிய வந்துள்ளது.

தனது சமூக வலைதளங்களில், ‘விரைவில் நண்பர்களுடன் விளையாட (ஜிம்மில்) தயாராக வருவேன். காத்திருங்கள்’ என்று தமாஷாக பதிவிட்டுள்ளார். அர்னால்டுக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சையும் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web