பிரபல இயக்குநரின் மகன் நடிக்கும் ‘ஹிட்லிஸ்ட்’.. முரட்டு வில்லனாக கௌதம் மேனன்!!

 
GVM

பிரபல இயக்குநரின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் முரட்டு வில்லனாக கௌதம் மேனன் நடித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

90-களில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் விகரமன். இவரது மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஹிட்லிஸ்ட்’. இந்த படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கே செல்லுலாய்ட்ஸ் தயாரிக்கிறது. இவர் ஏற்கனவே தெனாலி மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

Hitlist

இந்த படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய சூரியகதிர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இணைந்து இயக்கி வருகின்றனர். நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎஃப் புகழ் கருடா ராமச்சந்திரா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பயங்கரமான வில்லனாக நடிப்பதன் மூலம் இந்தப் படத்தின் நட்சத்திர பட்டியலில் தற்போது இணைந்துள்ளார். அவர் நடித்த சில முக்கியமான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன.

GVM

இந்த படத்தின் ஒளிப்பதிவை ராம்சரண் கையாள, படத்தொகுப்பை ஜானும் கலை இயக்கத்தை அருணும்  கவனிக்கின்றனர். ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படத்திற்கு தேவையான கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஆக்சன் திரில்லராக இந்த படம் இருக்கும். கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் இருக்கும் இந்த படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

From around the web