மனிதநேயம் இல்லாதவர்.. நடிகை அமலா பால் மீது பிரபல மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு!!

 
Amala Paul - Hema

பிரபல சினிமா மேக்கப் கலைஞர் ஒருவர் நடிகை அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

2009-ல் வெளியான ‘நீலதாமரா’ படத்தின் மூலம் மலையாள சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து, 2010-ல் வெளியான ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மைனா படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

Amala Paul

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அமலா பாலின் பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாய் புரோபோஸ் செய்த, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட அவை படு வைரலானது. மேலும் தன்னுடைய காதலன் புரோபோஸ் செய்த ஒரே வாரத்தில் அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த நிலையில், பிரபல சினிமா மேக்கப் கலைஞர் மற்றும் சிகை அலங்கார நிபுணராக இருக்கும் ஹேமா தனக்கு நடிகை அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, “ஒருமுறை சென்னையில் அமலா பாலுடன் படப்பிடிப்புக்கு சென்றேன். ஏப்ரல், மே மாதத்தில் கடும் வெயிலில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. நாங்கள் சென்ற இடத்தில் கொஞ்ச நேரம் நிழலில் உட்காரலாம் என்றால் கூட ஒரு செடியோ, மரமோ இல்லை.

Amala Paul

அதனால் கேரவேனுக்குள் உட்கார்ந்து கொண்டோம். ஆனால் நான் உட்கார்ந்த உடனே அமலா பால் தனது மானேஜரை அழைத்து என்னை வேனை விட்டு வெளியேறும்படி சொல்லி அனுப்பினார். நானும் இன்னும் சிலரும் அங்கு உட்கார்ந்திருந்தோம். இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம். ஆனால் நாங்கள் இறங்கும் வரை அவர் விடவில்லை. அதனால் வேனை விட்டு இறங்கினோம். 

இதுபோன்ற சம்பவங்கள் அவர் மூலம் எனக்கு நிறையவே நடைபெற்றன. வட இந்தியாவில் தபு போன்ற ஸ்டார் நடிகைகளுடன் கூட சேர்ந்து பணியாற்றினோம். எங்களைப் போன்றவர்களுக்காக தபு வேனையெல்லாம் அவரே புக் செய்து எங்களை நன்றாக பார்த்துக்கொள்வார்” என்றார்.

From around the web