இந்த மூஞ்ச வச்சுக்கிட்டு எப்படி நடிப்பனு தானே கேட்ட.. கவினின் ‘ஸ்டார்’ டிரெய்லர் ரிலீஸ்!

 
Star

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்டார்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவினுக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதற்கிடையே, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Star

இந்தப் படத்தில், கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ ஆகியவை சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடிகர் கவின் தன் டப்பிங் பணிகளை முடித்ததாக முன்னதாக அறிவித்திருந்தார். ஸ்டார் படம் வரும் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

From around the web