அமீர் - பாவனி பிரேக் அப் செய்துவிட்டார்களா..? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!

 
Amir - Pavani

பவானியை அமீர் பிரிந்து விட்டதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது இது குறித்து நடிகை பவானி விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு நிகழ்வு ரசிகர்களால் மறக்க முடியாத மாதிரி நடந்து விடுகிறது. அந்த மாதிரி தான் கடந்த 5வது சீசனில் ஒரு காதல் ஜோடி உருவாகி இருக்கின்றனர். இந்த 5வது சீசன் ஆரம்பத்தில் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்த பாவனி ரெட்டிற்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த சீசனில் முதல் ஆளாக ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் தொடங்கப்பட்டது பாவனிக்கு தான். சின்னத்திரை நடிகையாக பலருக்கும் பரீட்சைகளும் ஆகிய இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் பாவனின் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ளார்.

இருப்பினும் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக பெரும் சர்ச்சை ஒன்று கிளம்பியது. அதன் பின் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர், பாவனியை காதலிப்பதாக கூறி அவர் பின்னால் அந்நிகழ்ச்சி முழுவதும் சுற்றினார். இந்த சீசனில் பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள்.

Amir pavani

பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும்போது அமீரின் காதலை பாவனி ஏற்றுக்கொள்ளாத நிலையில், பின்னர் இருவரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து நடனம் ஆடினார்கள். அப்போது இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்படவே,பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி முடிவதற்குள் தங்களுடைய காதலையும் உறுதி செய்தது இந்த ஜோடி.

மேலும் இருவரும் காதலர்களாகவே இணைந்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில்... அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படத்திலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றனர். இது இவர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பாகவே பார்க்கப்பட்டது. மேலும் அவ்வபோது இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு தங்களுடைய காதலை வெளிப்படுத்தி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

Amir Pavani

இந்நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினார் பாவனி. அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என கேள்வி எழுப்பினார். அதற்கு பாவனி ஆமாம் என பதிலளித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ அமீர் உடனான காதல் பிரேக் அப் ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இருவரும் பிரியவில்லை. இப்படி வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என தெரிவித்து... இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

From around the web