யூடியூபர் இர்பானுக்கு ட்ரீட் கொடுத்த ஆளுநர்!! வைரல் வீடியோ
பிரபல யூடியூபர் இர்பானுக்கு திருமணம் முடிந்த நிலையில், ராஜ்பவனுக்கு இர்பான் மற்றும் அவரது குடும்பத்தாரையும் நேரில் வரவழைத்து விருந்து கொடுத்து ஆளுநர் வாழ்த்தியுள்ளார்.
உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமானவர் யூடியூபர் இர்பான். இவர் இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் சினிமா விமர்சனங்களை செய்து வந்த அவர், அதற்கு வரவேற்பு கிடைக்காததால், பல்வேறு ஊர்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளை சுவைத்து, அதனை வீடியோவாக வெளியிட தொடங்கினார்.
தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு சென்று பல வீடியோக்களை பகிர்ந்துள்ள அவர், வெளிநாடுகளுக்கும் சென்றும் அங்கும் பல ஹோட்டல்களில் சாப்பிட்டு வீடியோக்கள் பகிர்ந்துள்ளார். தற்போது இர்பான் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி அந்த வீடியோக்களையும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மே 14-ம் தேதி திருமணம் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் ஏராளமான பிரபலங்களும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Thiru. Mohammed Irfan, founder of 'Irfan's View" YouTube channel, along with his family, called on Governor Ravi at Raj Bhavan today. pic.twitter.com/QQuod5ocM5
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 17, 2023
அண்மையில் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில், ஆளுநருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திருமணத்தில் பங்கேற்க முடியாததால், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு இர்பான் மற்றும் அவரது குடும்பத்தாரையும் நேரில் வரவழைத்து விருந்து கொடுத்து ஆளுநர் வாழ்த்தியுள்ளார்.