விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. ‘தளபதி 69’ பட ஷூட்டிங் எப்போ தொடங்குது தெரியுமா?  

 
Thalapathy 69

கோட் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் சூழலில் விஜய்யின் அடுத்த படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜயின் 68வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது. கோட் படமானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது, இப்படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. 

GOAT

பொதுவாக தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருவதால் இந்தப் படமும் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். முக்கியமாக மங்காத்தா படம் போல் இந்தப் படத்தையும் மெகா ஹிட்டாக கொடுப்பார் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசை என்பதாலும்; பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு அவர் இசையமைப்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இதுவரை வெளியான இரண்டு பாடல்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கின்றன. இரண்டாவது பாடல் விஜய்யின் குரலில் மெலோடியாக வந்தாலும் அதுவும் பெரிதாக கவரவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

GOAT

இதற்கிடையே விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்குவதாக கூறப்படுகிறது. வினோத்தின் இந்தப் படம் விஜய்யின் அரசியல் களத்துக்கு நல்ல தளம் அமைத்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சமந்தா ஹீரோயினாக நடிக்கவிருந்ததாகவும்; பிறகு அவர் விலகிவிட்டார் என்றும் ஒரு தகவல் இடையில் ஓடுகிறது. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தளபதி 69 படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வரும் என்றும் சொல்லப்படுகிறது.

From around the web