உதவியாளர்களுக்கு தங்க காசு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை!!

 
Sriya Reddy

பிரபல நடிகை ஸ்ரேயா ரெட்டி ‘சலார்’ படத்தில் தன்னுடைய பணியாற்றிய உதவியாளர்களுக்கு பரிசு ஒன்றை வழங்கியிருக்கிறார்.

2002-ல் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சமுராய்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. அதன்பின், 2006-ல் விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம், சில சமயங்களில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

Salaar

இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் ரிலீஸூக்காக காத்திருக்கிறது. அதே போல கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சலார்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்து இருக்கிறார். 

இந்த நிலையில் அந்தப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கு தங்க நாணயங்களை அவர்ன் பரிசாக அளித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

Sriya Reddy

சலார் படத்தின் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி முன்னதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு பேசிய அவர், “படப்பிடிப்பில் பல்வேறு விஷயங்கள் நடக்கும். ஆனால் பிரஷாந்த் நீல் மிகவும் பொறுமையாக என்னை வழி நடத்தினார். சலார் திரைப்படம் கம் பேக் திரைப்படம். நான் மனதளவில் சிக்கிக்கொண்டேன். இந்த கதாபாத்திரம் எனக்கு கடினமாக இருந்தது. ஆனால் பிரசாந்த் அவருக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்.” என்று பேசினார்.

From around the web