‘GOAT’ டிரெய்லர் ரிலீஸ் தேதி.. நாளை அறிவிக்கிறார் பட தயாரிப்பாளர் அர்ச்சனா!

 
goat

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் டிரெய்லர் குறித்து படத்தின் தயாரிப்பாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜயின் 68வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

Goat

இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

கோட் படத்தின்  டீசர் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. கோட் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், கோட் படத்தின் டிரெய்லர் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களுக்காக டிரெய்லரை தயார் செய்து இருக்கிறோம். சில நாள்கள் பொறுமையாக இருங்கள். நாளை முறையான அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

From around the web