விஜய் பிறந்தநாளுக்கு ‘GOAT’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ‘கோட்’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜயின் 68வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னை, ராஜஸ்தான் மற்றும இஸ்தான்புல் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, கேரளாவில் நடைபெற்றது. தற்போது, இந்த படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5-ம் தேதி ரிலீஸ் என அறிவித்த பின்பு படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் புரோமோஷனும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.
முன்னதாக விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் நடனத்தில் ‘விசில் போடு’ பார்ட்டி பாடலாக யுவன் இசையில் வெளியாகி இருந்தது. ஆனால், இந்தப் பாடல் பெரிதாக வரவேற்பு பெறாமல் போனது. இதனால், இரண்டாவது பாடலை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். நாளை விஜயின் பிறந்தநாளுக்காக இரண்டாவது பாடல் பற்றிய அப்டேட்டை படக்குழு கொடுத்துள்ளது.
Oru chinna treat ♥️#TheGoatSecondSingle #ChinnaChinnaKangal is releasing tomorrow at 6 PM 🫶🏻
— venkat prabhu (@vp_offl) June 21, 2024
Yes!! Indha paadalai paadiyavar…@actorvijay Sir
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh
@agsentertainment#GOAT @thisisysr… pic.twitter.com/ECXl5WNlEn
‘சின்ன சின்ன கண்கள்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் போஸ்டரில் நடிகர்கள் விஜய், சிநேகா, மகன் விஜய் மூவரும் இருக்கும்படி உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் இந்தப் பாடலை யார் எழுதி இருக்கிறார்கள், பாடி இருக்கிறார்கள் என்பது பற்றிய விவரத்தை படக்குழு இன்னும் தெரியப்படுத்தவில்லை.
இந்தப் பாடல் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக, மறக்க முடியாத அனுபவமாக அமையும் என இயக்குநர் வெங்கட்பிரபுவும் கூறியிருக்கிறார். குடும்ப ரசிகர்களைக் கவரும்படி இந்தப் பாடல் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.