ஹாலிவுட் நடிகருடன் விரைவில் திருமணம்.. நடிகை எமி ஜாக்சன் தகவல்
புது காதலரும் நடிகருமான எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நடிகை எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
2010-ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அந்த படத்தில் க்யூட்டான வெள்ளைக்காரப் பெண்ணாக நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தற்போது அருண் விஜய்யுடன் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து வந்தார். திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கருத்து வேறுபாட்டால் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் தற்போது நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருகிறார்.
இருவரும் ஜாலியாக ஆங்காங்கே சுற்றி திரியும் படங்களை அவ்வப்போது எமி ஜாக்சன் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ராஜஸ்தான் உதய்ப்பூருக்கு காதலருடன் சென்ற எமி ஜாக்சன் அங்கு ஓட்டலில் தங்கி காதலருடன் இருப்பதையும், மசாஜ் சென்டர் மற்றும் ரெஸ்டாரண்டில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில், எமி ஜாக்சன் தனது காதலரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, “இப்போது இருவரும் சிறந்த சூழலில் இருக்கிறோம். எட் வெஸ்ட்விக் என் உணர்வுகளுடன் இணைந்தவர். திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருக்கிறோம். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்குமாக பறந்துகொண்டிருக்கிறேன். நான் நடித்துள்ள தமிழ்ப் பட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இந்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. என் மகன் ஆண்ட்ரியாஸ் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றேன். நான் எப்படி நடிக்கிறேன் என்பதையும் அவன் பார்க்க வேண்டும் என நினைத்தேன். அவனுக்கு நான் ஆதரவாக இருக்க வேண்டும்” என்றார்.