மருத்துவமனையில் ஜி.பி.முத்து... புகைப்படத்தை பார்த்து பதறும் ரசிகர்கள்.!

 
GP Muthu

பிக்பாஸ் மூலம் பிரபலமான டிக்டாக் ஜி.பி.முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக் டாக் மூலம் புகழ் பெற்றவர் ஜி.பி.முத்து. இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூ-டியூப் பக்கம் ஒன்றை தொடங்கினார். குறைந்த காலகட்டத்திலேயே இவரது பக்கத்தை மிக அதிகமானோர் பின் தொடர்ந்தனர். இதுவரை ஏறக்குறைய 9 லட்சத்துக்கு அதிகமானோர் ஜி.பி.முத்துவை பின் தொடர்கின்றனர். இவர் குறித்த மீம்ஸ்களும், வீடியோக்களும் தினமும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகும்.

GP Muthu

குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்த ஜி.பி.முத்துவுக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்து பணம், புகழ் கிடைக்கும் போதும் தனது பழசை மறக்காமல், இன்னமும் தன்னுடைய வெகுளித்தனத்துடன் இருப்பது தான் இவரது பலமாக கருதப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6ல், முதல் போட்டியாளராக வீட்டுக்குள் அடியெடுத்து அட்ராசிட்டி செய்தார். ஆதம் யார் என அவருக்கும் கமலுக்கும் நடந்த உரையாடல்கள் இப்போதும் மீம் கண்டெண்ட்டாக வலம் வருகிறது. ஆனால், சில நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து, சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்டு மீண்டும் ட்ரெண்டிங் ஆனார்.

A post shared by GPMuthu 24 🔘 (@1gpmuthu)

தற்போது விஜய் டிவியின் பிரப்பார்ட்டியாக மாறிவிட்ட ஜிபி முத்து, குக் வித் கோமாளி சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் அட்மிட்டாகியுள்ள ஜிபி முத்துவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. படுத்த படுக்கையாக பெட்டில் இருக்கும் ஜிபி முத்துவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜிபி முத்துவுக்கு என்ன ஆனது என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். மேலும் அவர் விரைவில் நலம்பெற வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

From around the web