நடிகை ராஷ்மிகாவிடம் மோசடி.. நீண்ட கால மேனனேஐரை நீக்கினார்!!

 
Rashmika Mandanna

நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்ட காலமாக மேலாளராக இருந்தவர், அவரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2016-ல் வெளியான ‘கரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தண்ணா. அதன்பின் அஞ்சனி புத்ரா, சமக் உள்ளிட்ட கன்னட படங்களில் நடித்த அவர், சலோ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். 2018-ல் வெளியான  ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார்.

Rashmika Mandanna

2021-ல் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் நடித்து இருந்தார். தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்ததாக 'அனிமல்' என்ற படத்தை இயக்கி வருகிறார். ரன்பீர் கபூர் நடிக்கும் இந்தப் படத்தில் ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகாவிடம் மேலாளராக இருந்த நபர், அவரிடம் பண மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்மிகாவிடம் இருந்து சுமார் 80 லட்சம் ரூபாயை அந்த நபர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்ததும், ராஷ்மிகா உடனடியாக அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Rashmika Mandanna

ராஷ்மிகாவிடம் நீண்ட காலமாக மேலாளராக பணிபுரிந்தவர் பணத்தை ஏமாற்றியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இது குறித்து ராஷ்மிகா எதுவும் கூறவில்லை. தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலம் முதல் தன்னிடம் பணிபுரிந்தவர் பணத்தை ஏமாற்றியதால், அதை ராஷ்மிகா பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.      

From around the web