ஆஸ்கர் வரலாற்றில் முதன்முறை.. மேடையில் நிர்வாணமாக தோன்றிய ஜான்சீனா.. வைரல் வீடியோ!

 
John Cena

ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில் பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா மேடையில் நிர்வாண நிலையில் வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

உலக அளவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை வாங்க வேண்டும் என்பது, திரை துறையைச் சேர்ந்த ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் மிகப்பெரிய கனவு என்றே கூறலாம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் 96-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 2-வது முறையாக காமெடி நடிகரான ஜிம்மி கிம்மெல் வழங்குகிறார். இந்த விருது வழங்கும் விழாவில் எம்மா ஸ்டோன், ரியான் கோஸ்லிங், ராபர்ட் டி நிரோ, பிராட்லி கூப்பர் மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் உள்ளிட்டோர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.  

John Cena

இதில், புவர் திங்ஸ் என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது. இதனை பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா வழங்குவதற்காக மேடையில் தோன்றினார். அவர் வருவதற்கு முன் நிகழ்ச்சி தொகுப்பாளரான கிம்மல் பார்வையாளர்களை நோக்கி, நிர்வாண மனிதர் ஒருவர் மேடையில் இன்று ஓடி சென்றால் எப்படி இருக்கும் என நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அது பைத்தியக்காரத்தனம்போல் இருக்காது? என கேட்டார்.

கிம்மல் அப்படி கேட்டதும் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தவர்கள் பகுதியில் இருந்து சிரிப்பலை எழுந்தது. அப்போது, மேடையின் ஓரத்தில் இருந்து ஜான் சீனா தலையை எட்டி பார்க்கிறார். பின்னர் அவர், நிர்வாண நிலையில் மேடையில் மெல்ல நடந்து வருகிறார். எனினும், அந்தரங்க பாகங்களை மறைத்தபடி மேடையில் மைக் முன்னே நின்று பேசினார்.  


அவர் கிம்மலிடம், என்னுடைய எண்ணங்களை நான் மாற்றி கொண்டேன். மேடையில் நிர்வாண நிலையில் ஓடும் செயலை செய்ய விரும்பவில்லை. அது சரியாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை. இது ஓர் அழகான நிகழ்ச்சி. சிரிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று கூறுவதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். ஆண் உடல் ஒன்றும் நகைச்சுவைக்கானது அல்ல என்று பேசினார்.

இதனை கேட்டு பார்வையாளர்கள் சிரிப்பலை எழுந்தது. ஆஸ்கார் விருதுக்கு இந்த ஆண்டு 8 பிரிவுகளுக்கு பார்பி படம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. பார்பி படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜான் சீனா நடித்திருக்கிறார்.  இந்த விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதுக்கான பெயர் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

From around the web