‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் சிங்கிள்.. பாடலாசிரியர் அவதாரம் எடுத்த தனுஷின் மகன்!

 
NEEK

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் சிங்கிள் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகிறது.

‘பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நடிகர் தனுஷ். இதனைத் தொடர்ந்து, தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த ‘ராயன்’ கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

NEEK

இந்தப் படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தின் முதல் பாடலுக்கான பைனல் மிக்சிங் முடிவடைந்திருக்கிறது. 

இந்த நிலையில், நடிகர் தனுஷ் இந்த படத்தின் முதல் சிங்கிளான ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் வெளியாகும் தேதியை போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி இப்பாடல் வரும் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.


தற்போது இந்த பாடல் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த பாடலுக்கு தனுஷின் மூத்த மகனான யாத்ரா தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அதனை பாராட்டி நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

From around the web