செக் மோசடி.. திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது

 
Sivasakthi Pandiyan

செக் மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.

1996-ல் அஜித் நடிப்பில் வெளியான ‘வான்மதி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவசக்தி பாண்டியன். தொடர்ந்து காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, கண்ணெதிரே தோன்றினாள் , வெற்றி கொடி கட்டு ஆகிய படங்களை இயக்கியுள்ளர்.

Sivaskathi PS

இந்த நிலையில், பிரபல நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக சிவசக்தி பாண்டியன் ஒரு நிறுவனத்தில் 1.70 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதற்கு காசோலை கொடுத்துள்ளார். ஆனால் பணம் இல்லாமல், அந்தக் காசோலை திரும்பிவிட்டது.

இதையடுத்து அந்த நிறுவனம், சிவசக்தி பாண்டியன் மீது காசோலை மோசடி வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்தது. நீதிமன்றம் சிவசக்தி பாண்டியனுக்கு கால அவகாசம் வழங்கியும், பணத்தை அவர் திரும்பக் கொடுக்க முன்வரவில்லை.

Bangladeshi-Teen-Arrested-While-Sneaking-Into-India

அதனால் சிவசக்தி பாண்டியனைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை அவரின் வீட்டில் வைத்து கைதுசெய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

From around the web