தந்தை கொலை மிரட்டல்.. கதறியழுத தமிழ் நடிகை... வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

 
Arthana Binu

நடிகை அர்த்தனா பினு தனது அப்பா மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தங்கள் வீட்டில் அத்துமீறி சுவர் ஏறி குதித்து கொலை பண்ணிடுவேன் என மிரட்டுகிறார் என வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘சீதம்மா ஆண்டாளு ராமைய்யா சித்ரலு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அர்த்தனா பினு. அதன் பின்னர் மலையாளத்தில் அதே ஆண்டு முதுகாவ் எனும் படத்திலும் ஹீரோயினாக நடித்து அசத்தினார். 26 வயதாகும் நடிகை அர்த்தனா பினு தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

2017-ல் சமுத்திரகனி, விக்ராந்த் நடித்த ‘தொண்டன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ‘செம’ படத்தில் நடித்தார். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா, சத்யராஜ் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் பிரியா பவானி சங்கரை போலவே இவரும் ஒரு முறைப்பொண்ணாக நடித்திருப்பார்.

இதனிடியே நடிகை அர்த்தனா பினு தன்னுடைய தந்தை மீது பல குற்றசாட்டுகளை சுமத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது தந்தை வீட்டின் சுவர் ஏறி சென்று வெளியே செல்வது இருந்து., அதனுடன் நீண்ட செய்தியை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

Arthana Binu

அதில். “ காலை 9.45 மணியளவில் காவல் நிலையத்தை உதவிக்கு அழைத்தும் யாரும் எந்த நடவடிக்கை எடுக்காததால் இந்த பதிவை வெளியிடுகிறேன். இந்த வீடியோவில் இருப்பவர் மலையாள நடிகரும் எனது தந்தையுமான விஜய குமார். எனக்கும் என் அம்மாவிற்கும் தங்கைக்கும் சாதகமாக சுமார் 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது சொத்துக்காக சுவர் ஏறி குத்தித்து எங்கள் குடியிருப்பை  பத்தாண்டுகளுக்கு முன்பு எனக்கும், அம்மாவுக்கும், என் சகோதரிக்கும் ஆதரவாகப் பாதுகாப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தும்,  அவருடைய சொத்துக்காகச் சுவர் ஏறி குதித்துள்ளார்.

எனது பெற்றோர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றவர்கள், நானும் எனது அம்மாவும் எனது சகோதரியும் 85+ வயதுடைய எனது தாய்வழி பாட்டியுடன் எங்கள் தாய் வீட்டில் வசித்து வருகிறோம். அவர் இது போன்று பல ஆண்டுகளாக அத்துமீறி நுழைந்து வருகிறார், மேலும் அவர் மீது போலீஸ் வழக்குகள் பல உள்ளன.  இன்று, அவர் எங்கள் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தார், கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவர் திறந்த ஜன்னல் வழியாக எங்களை மிரட்டினார்.

என் சகோதரியையும் பாட்டியையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். மேலும் படங்களில் நடிப்பதை நிறுத்த வேண்டும்  என்றும், நான் கீழ்ப்படியாவிட்டால் எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் மிரட்டினார். அதன் மீறியும் நடிக்க வேண்டும் என்றால் அவர் சொல்லும் படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று கூறினார்.

A post shared by Arthana Binu (@arthana_binu)

ஜன்னல்கலை தட்டி கொண்டும் கத்திக் கொண்டே இருந்தார்.  என் பாட்டி என்னை வாழ்வாதாரத்திற்காக விற்று வருவதாக கூறினார்.  நான் தற்போது முடித்துள்ள எனது மலையாளப் படத்தின் குழுவையும் அவர் மோசமாகப் பேசினார்.  எனது பணியிடத்தில் அத்துமீறி நுழைந்து, ஊடுருவி, பிரச்சனைகளை உருவாக்கி, என் அம்மாவின் பணியிடத்திலும், சகோதரியின் கல்வி நிறுவனத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியதற்கு எதிராக நானும், என் அம்மாவும் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் போது இவையெல்லாம் நடக்கின்றன.

என் விருப்பப்படி மட்டுமே படங்களில் நடிக்கிறேன்.  நடிப்பு என்பது எப்போதுமே எனது விருப்பம், எனது உடல்நிலை என்னை அனுமதிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன்.  நான் மலையாளப் படத்தில் நடிக்கும்போதெல்லாம் என்னை நடிக்கவிடாமல் தடுத்து வழக்கு தொடர்ந்தார்.  நான் ஷைலாக் படத்தில் நடித்தபோது கூட, அவர் ஒரு சட்டப்பூர்வ வழக்கைத் தொடர்ந்தார், மேலும் படம் கிடப்பில் போடப்படுவதைத் தடுக்க, நான் என் விருப்பப்படி படத்தில் நடித்தேன் என்று அதிகாரப்பூர்வ சட்ட ஆவணத்தில் கையெழுத்திட வேண்டியிருந்தது.  மேலும் தொடர்ந்து என் அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய பணம் மற்றும் தங்கத்தை மீட்டுத் தரக் கோரி அவர் மீது வழக்கும் தற்போது நடந்து வருகிறது.” என்று குற்றசாட்டுகளை அடுக்கி குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

From around the web