கார் விபத்தில் பிரபல இளம் நடிகை மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்!!

 
vaibhavi-upadhyay

இந்தி சீரியல் மூலம் பிரபலமான டிவி நடிகை வைபவி உபாத்யாய் கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 32.

ஸ்டார் ஒன் சேனலில் 2004 முதல் 2006 வரை ஒளிபரப்பான தொடர் ‘சாராபாய் vs சாராபாய்’. இரண்டு சீசன்களாக ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வைபவி உபாத்யாய் நடித்துள்ளார். இந்தத் தொடருக்கு பிறகு வைபவி பல்வேறு சீரியல்களிலும், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

vaibhavi-upadhyay

இந்த நிலையில், நேற்று (மே 23) வைபவி தனது வருங்கால கணவருடன் இமாச்சல் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்தது. 

இந்த விபத்தில் நடிகை வைபவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வருங்கால கணவரின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது வைபவியின் குடும்பத்தினர் அவரது உடலை மும்பைக்கு கொண்டு சென்று அங்கு அவரது இறுதிச் சடங்குகளை நடத்த இருக்கின்றனர். 

RIP

வைபவியின் மறைவுக்கு அவருடன் நடித்த சக நடிகர்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இளம் நடிகை சாலை விபத்தில் மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

From around the web