பிரபல இளம் நடிகை மூளைச்சாவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 
Park Soo Ryun

பிரபல இளம் நடிகை கொரிய நடிகை பார்க் சூ ரியுன் படிக்கட்டில் உருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 29.

2018-ம் ஆண்டு Il Tenore என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்க் சூ ரியுன். மேலும் ஃபைண்டிங் மிஸ்டர் டெஸ்டினி, தி டேஸ் வி லவ்ட் மற்றும் சித்தார்த்தா உள்ளிட்ட பல  படங்களில் நடித்துள்ளார். அதேபோல் பார்க் சூ ரியுன் பிளாக்பிங்கின் ஜிசூ மற்றும் ஜங் ஹே இன் ஸ்னோ டிராப் ஆகியவற்றிலும் துணை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு திருப்புமுனையாக ஜேடிபிசி வரலாற்று நாடகமான ஸ்னோ ட்ராப் படம் அமைந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களில் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி ரசிகர்களை மகிழ்வித்தார். 

Park Soo Ryun

இந்த நிலையில், நடிகை பார்க் சூ ரியுன் கடந்த 11-ம் தேதி காலமானார். அறிக்கைகளின்படி, இவர் தனது வீட்டிற்கு செல்லும் போது மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று கூறப்படுகின்றது. இதனால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் இவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த விபத்தின் காரணமாக இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் கப்பாற்ற முடியவில்லை என்றும் இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை பார்க் சூ ரியுன் மரணமடைந்த தகவல் அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் திரையுலகில் சோக அலை வீசுகிறது. அனைவரும் சமூக வலைதளங்களில் நடிகைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பார்க் சூ ரியுனின் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

A post shared by Viral Bhayani (@viralbhayani)

நடிகையின் தாயார் கூறுகையில், “தனது மகளின் மூளை பதிலளிக்கவில்லை, ஆனால் அவரது இதயம் செயல்படுவதாக தெரிவித்தார். அவள் இன்னும் அருகில் இருப்பதாகவும், நீண்ட ஆயுளுடன் வாழத் தகுதியான ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்ததாக கூறினார்.

நடிகையின் உடல் சுவோன் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிச் சடங்குகள் இன்று அதாவது ஜூன் 13ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

From around the web