எந்தா பழக்கம் சாரே இது.. ஃபுல் போதையில் விமான நிலையத்தில் தகராறு! ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன் கைது!
பிரபல வில்லன் நடிகர் விநாயகன் வ்வபோதையில் விமான பாதுகாப்பு அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1995-ல் வெளியான மாந்திரீகம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விநாயகன். தொடர்ந்து 2006-ல் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர். காளை, சிலம்பாட்டம் , மரியான் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் 2016-ம் ஆண்டு ராஜீவ் ரவி இயக்கத்தில் வெளியான கம்மாட்டி பாடம் படத்தில் கங்கா என்னும் கதாபாத்திரவில் நடித்திருந்திருந்த விநாயகனின் நடிப்பு அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் விநாயகன் பெற்றார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சக்கைப்போடு போட்ட ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற கதாபாரத்தில் மலையாளம் கலந்து பேசும் அவரது பேச்சு மொழியும் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்றது.
குறிப்பாக, இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்த்து மனசிலாயோ என மலையாளத்தில் பேசும் வசனம் திரையரங்கில் அப்லாசை அள்ளியது. இந்த படத்தின் மூலம் அனைவரின் பேவரைட் வில்லனாக மாறிய விநாயகன் தொடர்ந்து மூன்று தமிழ் படங்களில், முக்கிய வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விநாயகன் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவா செல்லும் போது இணைப்பு விமானம் ஐதராபாத்தில் இருந்ததால், ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்த போது, சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அப்போது, அவர் மது அருந்தி இருந்ததாகவும், மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சப்ப யரயவாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அவரை கைது செய்து ஐதராபாத் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.