பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை..? ட்விட்டரில் வெளியான அதிகாரப்பூர்வ பதிவு

 
Bombay Jayashree

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக இருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் பாம்பே ஜெயஸ்ரீ. தமிழ் குடும்பத்தை சேர்ந்த இவர் தனது பெற்றோரிடமிருந்தே வாய்ப்பாட்டு பாடி கற்று வந்தார். இதையடுத்து லால்குடி ஜெயராமன், டி.ஆர் பாலமணி ஆகியோரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார். பிறகு தண்டபாணி ஐயரிடம் வீணையையும் கற்று தேர்ந்தார். 

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவர் மின்னலே திரைப்படத்தில் இடம் பெற்ற வசீகரா என்ற பாடலை பாடியுள்ளார். இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். அதை தொடர்ந்து ஏராளமான ஹிட்பாடல்களை அவர் பாடியுள்ளார்.

Bombay Jayashree

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஷ் ஜெயராஜ் உள்ளிட்டவர்களின் இசையில் பாம்பே ஜெயஸ்ரீ பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் தொடர்ந்து பாடி வந்தார். அதேபோல் வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றம் பாடல்களைப் பாடி வருகிறார்.

இந்த நிலையில், லண்டனில் நடக்கும் ஒரு இசை நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார். அதில் அவரின் தலை பகுதியில் பலத்த அடிப்பட்டுள்ளது. இதையடுத்து சுயநினைவை இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதையடுத்து லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதென்று அவரின் ட்விட்டர் கணக்கில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  அதில், “பாம்பே ஜெயஸ்ரீக்கு லண்டனில் உடல்நிலை சரி இல்லாமல் போனது. உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது. அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இன்னும்  சில நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

From around the web