பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம்.. பிரபலங்கள் வாழ்த்து!

 
Shimona

‘பாவம் கணேசன்’ சீரியல் நடிகை ஷிமோனாவுக்கு கோவையில் திருமணம் நடைபெற்றது.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாயகி’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கோவையைச் சேர்ந்த நடிகை ஷிமோனா. அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாவம் கணேசன்’ தொடரில் நடித்தார். ஆனால், அதன் பிறகு சீரியலில் பார்க்க முடியவில்லை. 

Shimona

இருப்பினும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும், ஷிமோனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நிறுவனத்தில் பணியில் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து, தனக்கு நிச்சயதார்த்தம் நடத்த தகவலையும், திருமணம் குறித்த செய்தியையும் ரசிகர்களுக்கு அறிவித்தார்.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி கோவையில் நடிகை ஷிமோனாவின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கிரண் என்பவரை ஷிமோனா திருணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். 

மேலும், இவர்களுடைய திருமணத்திற்கு சின்னத்திரை நடிகர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இவருடைய திருமண உடையில் திருமண தேதி, கிரன்- ஷிமோனா ஆகியோரின் பெயர் இடம் பெற்று இருக்கிறது. தற்போது இந்த புகைப்படம் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது

From around the web