பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம்.. குவியும் வாழ்த்துகள்!

 
Arthika

பிரபல சீரியல் நடிகை அர்த்திகாவுக்கு திருமணம் முடிந்த நிலையில், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று கார்த்திகை தீபம். ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே இந்த சீரியலின் டிஆர்பி, எதிர்பாராத ரீச் ஆகிவிட்டது. இந்த சீரியலில் செம்பருத்தி தொடரில் ஹீரோவாக நடித்த கார்த்திக் ராஜ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தீபா என்ற கேரக்டரில், நடிகை ஆர்த்திகா நடித்து வருகிறார்.

Harthika

இவர் நிஜவாழக்கையில் மிகவும் கலரான நடிகை கார்த்திகை தீபம் சீரியலின் தீபா கேரக்டருக்காக தன்னை கருப்பாக மாற்றிக்கொண்டுள்ளார். இந்த கேரக்டருக்கும் சீரியலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை ஆர்த்திகாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனது வாழ்வின் சிறந்த தருணங்கள் எனச் சொல்லி இந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

A post shared by Arthika (@itsme_arthika)

மாப்பிள்ளை கேரளாவை சேர்ந்தவர் என்பதால் இவரின் திருமணம் அவரின் குடும்ப வழக்கப்படி நடந்து முடிந்துள்ளது. ஆனால், மாப்பிள்ளை குறித்தான விவரங்களை அர்த்திகா எதுவும் வெளிப்படையாகப் பகிரவில்லை. அர்த்திகாவுக்கும் அவரது கணவருக்கும் ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் தங்களது திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

From around the web