பிரபல பழம்பெரும் பாலிவுட் நடிகர் மரணம்.. ரசிகர்கள் இரங்கல்!

 
Mangal Dhillon

பிரபல பாலிவுட் நடிகர் மங்கள் தில்லான் நேற்று காலமானார். அவருக்கு வயது 78.

1986-ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘புனியாட்’ தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் மங்கள் தில்லான். 1988-ல் வெளியான ‘கூன் பாரி மாங்’  படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர், மீண்டும் 1993-ம் ஆண்டு ஒளிபரப்பான ‘ஜுனூன்’ தொடரில் இடம்பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, ’பியார் கா தேவ்தா’, ‘ரன்பூமி’, ‘ஸ்வர்க் யஹான் நர்க் யஹான்’, ‘விஷ்வாத்மா’, ‘தில் தேரா ஆஷிக்’, ‘ட்ரெய்ன் டு பாகிஸ்தான்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் மங்கள் தில்லான் நடித்துள்ளார்.

Mangal Dhillon

சில ஆண்டுகளுக்கு முன்வு தில்லானுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால் பஞ்சாபில் உள்ள லூதியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமடைவே நேற்று (ஜூன் 11) சிகிச்சை பலனின்றி மங்கள் தில்லான் காலமானார். அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RIP

சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் டிவிட்டரில், தனது இரங்கலைப் பகிர்ந்து கொண்டு ஒரு பதிவை இட்டுள்ளார். அந்த பதிவில், “மிகப்பெரிய நடிகர், எழுத்தாளர், இயக்குநர் மற்றும் பஞ்சாபி திரையுலகின் தயாரிப்பாளர் திரு. மங்கள் தில்லானின் மறைவு பற்றி அறிந்து வருந்துகிறேன். இது இந்திய சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்பு. அவரது வசீகரிக்கும் குரல் மற்றும் நாடக காட்சிகளை இனி புதிதாக பார்க்க முடியாமல் பலரும் வாடுவார்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web