பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!!

 
Alan Arkin

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆலன் ஆர்கின் வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே காலமானார். அவருக்கு வயது 89.

1957-ல் வெளியான ‘கலிப்சோ ஹீட் வேவ்’ படத்தின் மூலம் சிறிய பாத்திரத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கை தொடங்கியவர் ஆலன் ஆர்கின். எண்டர் லாபிங், தி ரஷியன் ஆர் கம்மிங், தி ஹாட் இஸ் எ லோன்லி ஹண்டர், கேட்ச் 22, வேல்ட் அண்டில் டார்க் உள்பட நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவை, குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

Alan Arkin

அதுமட்டுமல்லாமல், 1963-ம் ஆண்டு 'என்டர் லாபிங்' என்ற படத்திற்காக டோனி விருதை வென்றார். தொடர்ந்து, 1968-ஆம் ஆண்டு 'லிட்டில் மர்டர்ஸ்' திரைப்படத்தை இயக்கியதற்காக டிராமா டெஸ்க் விருதையும் வென்றார். 1966-ம் ஆண்டு நகைச்சுவைத் திரைப்படமான ‘தி ரஷியன்ஸ் ஆர் கம்மிங், தி ரஷியன்ஸ் ஆர் கம்மிங்’ திரைப்படத்தில் நடித்ததற்காக, ஆலன் ஆர்கின் சிறந்த நடிகருக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ‘லிட்டில் மிஸ் சன்ஷைன்’ என்ற திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இந்த படத்திற்காக இவர் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். சமீபத்தில், நெட்பிளிக் ஓடிடி தளத்தில் வெளியான 'தி கோமின்ஸ்கை மெத்தட்' வெப் தொடரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதற்காக ஆலன் ஆர்கின், எம்மி, கோல்டன் மற்றும் எஸ்.ஏ.ஜி போன்ற விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

RIP

இந்நிலையில், ஆலன் ஆர்கின் வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் மறைவை அவரது மகன்களான ஆடம், மேத்யூ மற்றும் அந்தோணி உறுதிப்படுத்தியுள்ளனர். பன்முகத்தன்மைக் கொண்ட ஆலன் ஆர்கின் மறைந்த செய்தி ஹாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web