சிவாஜி வீட்டு மருமகனான பிரபல இயக்குநர்.. திரை பிரபலங்கள் வாழ்த்து!

 
Adhik Ravichandran - Aishwarya

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று (டிச. 15) கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

2015-ல் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

Adhik Ravichandran - Aishwarya

இவரும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அவருடைய சகோதரி தேன்மொழியின் மகன் குணாலுடன் 2009-ம் ஆண்டு திருமணம் மிகவும் கோலாகலமாக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆன ஐஸ்வர்யா, சில வருடங்களிலேயே விவாகரத்தாகி பெற்றோருடன் சென்னையில் வசித்து வந்தார்.

இந்த நேரத்தில் தான் ஐஸ்வர்யாவுக்கும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, இரு வீட்டாரும் இவர்களது காதலை ஏற்றுக்கொண்டனர்.

Adhik Ravichandran - Aishwarya

இந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

From around the web