பிரபல நடிகை வினிதாவின் கணவர் திடீர் மரணம்.. ரசிகர்கள் இரங்கல்!

 
Vanitha

நடிகை வனிதாவின் முன்னாள் கணவரான பீட்டர் பால் திடீரென மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் விஜயகுமார் - மஞ்சுளா சினிமா தம்பதிகளின் மகளான வனிதா விஜயகுமார், நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுமானார். அதற்கு பிறகு, அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடுகளால் 2 முறையும் முறிவுக்கு வந்தது.

இந்த நிலையில்தான், வனிதா பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று தனது வெளிப்படையான தைரியமான கேரக்டரால் அனைவரின் கவனத்தையும் திருப்பி தன்னைப்பற்றி பேச வைத்தார். அப்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் ஆன அவர் தொடர்ந்து சீரான இடைவெளியில் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் இன்னும் ட்ரெண்டிங்கில்தான் இருக்கிறார்.

Vanitha

இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி பீட்டா் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக பீட்டா் பால் மீது வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பீட்டர் பாலின் மனைவி உடனடியாகப் புகாா் அளித்தாா். 

வனிதா விஜய்குமாரும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும் பேட்டிகளில் ஒருவரையொருவர் விமர்சித்துக்கொண்டார்கள். பிறகு, கணவர் பீட்டர் பாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அவரை வனிதா விஜய்குமார் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.

Vanitha

இந்நிலையில் பீட்டர் பால் கடந்த சில மாதங்களாகவே உடல் நலமின்றி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீர் என அவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பலரும் அவருக்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பீட்டர் பால் ஒரு விஷுவல் எபெக்ட் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. வனிதா யூடியூப் சேனல் ஒன்று துவங்குவதற்கு பீட்டர் பாலின் உதவியை தேடி சென்ற போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, பின்னர் அது திருமணத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web