பிரபல நடிகை தற்கொலை விவகாரம்.. நடிகையுடன் ஹோட்டலில் 17 நிமிடம் இருந்த நபர் யார்? சிசிடிவி வெளியிட்ட போலீசார்

 
Akanksha Dubey

நடிகை ஆகான்க்சா துபே உயிரிழப்பதற்கு முன்பு அவருடன் சந்தீப் சிங் என்பவர் ஹோட்டலுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

‘மேரி ஜங் மேரா பைஸ்லா’ என்ற படத்தில் தனது 17 வயதில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஆகான்க்சா துபே. அதன்பின், போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி 2 மற்றும் பிற படங்களிலும் அவர் நடித்து உள்ளார்.

இவர், தனியாக 60 சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார். போஜ்புரியில் பிரபல நடிகர்களான கேசரி லால் யாதவ், பவன் சிங் மற்றும் பிரதீப் பாண்டே ஆகியோருடனும் ஒன்றாக நடித்து உள்ளார்.

Akanksha Dubey

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (25) தூக்கு போட்ட நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நடிகை உயிரிழப்பதற்கு முன்பு அவருடன் ஒரு நபர் ஹோட்டலுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இந்த காட்சியில், ஆகான்க்சா கருப்பு டி-சர்ட் அணிந்த ஒரு இளைஞருடன் காணப்படுகிறார். இளைஞன் ஆகான்க்சாவை காரில் இருந்து இறக்கிவிட்டு ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்கிறான். படிக்கட்டுகளில் கூட, அந்த இளைஞன் ஆகான்க்சாவைக் கையாளுவதைக் காணலாம். பின்னர் இருவரும் வரவேற்பு கவுண்டர் வழியாக அறை எண் 105ஐ அடைந்தனர்.


இந்த அறையில் ஆகான்க்சா இறந்து கிடந்தார். ஆகான்க்சாவின் அறையில் 17 நிமிடம் தங்கியிருந்த அந்த இளைஞன் அங்கிருந்து வெளியேறியதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்போது ஆகான்க்சாவை அறைக்கு இறக்க வந்த அந்த இளைஞன் யார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

சிசிடிவி காட்சிகளில் காணப்பட்ட அந்த இளைஞனின் பெயர் சந்தீப் சிங் என்று தெரியவந்துள்ளது. அன்று இரவு சந்தீப் ஆகான்க்சாவின் அறையில் 17 நிமிடம் தங்கியிருந்தார்.போலீசார் விசாரணைக்கு பின் சந்தீப்பை விடுவித்தனர். சிசிடிவி காட்சிகள் வெளிவந்ததையடுத்து, சந்தீப் சிங்கை போலீசார் எப்படி விட்டுச்சென்றனர் என்று ஆகான்க்சாவின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

From around the web